வெண்முரசு மாறுபட்ட பரிமாணம்
பல காலமாக வாசிக்கிறேன்.. ஆனாலும் நுனிப்புல் மேய்பவன்தான். வெண்முரசை சில நாட்களாக வாசிக்கிறேன்(?!). மகாபாரதம் காலம் காலமாக மக்கள் குழுக்களினால் புறணி பேசப்பட்டு உருமாறிக் கொண்டே வந்துள்ளதாகத்தான் நினைத்தேன். ஜெ. அவர்கள் வெண்முரசின் சூதர் கதைகள் மூலம் அதை உணர்த்தும் போது மனதில் சிறிய புன்னகையும் ஆர்வமும் உண்டாகிறது. இறங்கினால் கட்டி இழுத்துச் செல்லும் என்றே நினைக்கிறேன்.. பல வாசகர்களின் கருத்துப் பதிவும் அதையே உணர்த்துகிறது. ஜெ. அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்....